காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம் – காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் டுவீட்..

காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார், கொரோனா தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரும், அவரது மனைவி தமிழ்செல்வியும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.பி. வசந்த குமாரின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‟இப்பொழுது தான், சகோதரர் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்திடம் பேசினேன், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்ததை அறிந்துக்கொண்டேன்.  நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து, எல்லாவற்றையும் தாங்க அவருக்கு வலிமை கொடுக்கவும், நோயை எதிர்த்து போராடி, வென்று,  விரைவில் குணமடையவும், எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version