ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பாப்பன்னபாளையத்தில் நின்றிருந்த காரில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த காரின் கதவுகள் மூடிய நிலையில் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன.
குழந்தைகள் மூவரும் கண்ணாடியை திறக்க முயற்சித்து,போராடிய நிலையிலேயே உயிர் பிரிந்துள்ளது.குழந்தைகள் 3 மணி நேரமாக போராடியதாக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்த யாஸ்மீன்,பர்வீன்,சுல்தானா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைப்பெறுகிறது.இறந்த 3 குழந்தைகளுக்கும் 6 வயதே ஆகிறது.