ரம்யா பாண்டியன் வரட்டும் ஆனால் நான் வரமாட்டேன் – புகழ் பரபரப்பு.

புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எடுத்த எடுப்பிலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று அதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

பிக்பாஸ் தொடங்கியதில் இருந்து இப்போது வரை அதற்கான ஆரவாரம் அடங்கியதே இல்லை. அதுபோல தான் இப்போதும் தொடங்கிவிட்டது.

முதல் சீசன் அறிமுகமானதில் தொடங்கி 3 சீசன் முடிந்து இருந்தாலும் ஒவ்வொரு சீசனிலும் பெரும் பரபரப்பாகவும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்திலும் கலக்கிக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் தொடங்கி விடும். ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இந்த கொரோனாவாலும் லாக்டோன் பிரச்சனை காரணத்தினாலும் இந்த முறை இவ்வள்வு தாமதம். ஆயினும், பிக் பாஸ் கமல்ஹாசனே வந்து அதை சொல்லி விட்டுப் போய் விட்டார் அதனால் அதற்கான் ஏதிர்பார்பு மக்களிடயே கூடியுள்ளது. கொனோரா காலம் என்பதால் எப்பவும் இருக்கும் கட்டுப்பாடுகளை விடவும் அதிகமான கட்டுப்பாடுகளோடு இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 4 ஆரம்பிக்கப் போகிறது என்ற புரோமா வந்தது முதலே ரசிகர்கள் இப்பவே யார் யார் அதில் வரப் போகிறார்கள் என்ற ஊகங்களில் இறங்கி விட்டனர். அதை விட முக்கியமாக யார் யார் வந்தால் நல்லாருக்கும் என்ற லிஸ்ட்டையும் இவர்களே போட ஆரம்பித்து விட்டனர். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சமூக இணையதளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் கூட இந்த முறை பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

சீசன்4ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் டிவி பிரபலமான ஷிவானி நாராயணன், சூடாகப் பேசி பிரபலமான வாயாடி சூர்யா தேவி, சனம் செட்டி , கோபிநாத், நம்ம ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , மணிமேகலை, அமிர்தா ,அதுல்யா ரவி, கவர்ச்சி நடிகை கிரன் ,வித்யூலேகா ராமன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.

ஆனால் புகழ் ஏற்கனவே தான் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் தனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தாலும் நான் போகமாட்டேன் ஏனெனில் தனக்கு மனதில் பட்டதை அப்படியே முகத்திற்கு நேராக கூறும் பழக்கம் இருப்பதால் என் பெயர் கெட்டுப்போக வாய்ப்பு இருகின்றது அதனால் தான் கலந்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார்.

முதல் 3 சீசன் களிலும் ஏதாவது ஒரு லவ் ஸ்டோரி உருவானது, லவ் ஜோடியும் வெளியில் வந்தது. ஆனால் இந்த சீசனில் அப்படி யார் வந்து மாட்ட போகிறார்கள் என்று ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமாக காத்து இருக்கிறார்களாம். கண்டிப்பாக இந்த காதல் ஜோடியில் ஒருவராக ஷிவானி இருக்கலாம் என்று இப்பவே பெட் கட்ட ஆரம்பித்து விட்டனராம் பல ரசிகர்கள். ஆக மொத்தம் செம வேட்டை காத்திருக்கிறது இந்த முறை என்பதில் சந்தேகம் இல்லை.

Exit mobile version