உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதிப்பு மாநிலமாக அறிவித்து, அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், உத்தரப் பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மார்ச் 31 ஆம் தேதி அல்லது அரசின் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில், நாள்தோறும் 50க்கும் குறைவான பேருக்கே கொரோனா தொற்று உறுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.