பா.ஜ.க. மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், மக்களுக்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், அரசியல் தலைவர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.