தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 70 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அவர்களில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,861 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,348 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version