மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்களும், மருத்துவ ஊழியர்களும், சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா வைரஸ்-ன் பாதிப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தை தொடங்கியிருப்பதால், மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நேற்று அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.