கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், நெகடிவ் என வந்திருப்பதனால், தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (70), கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகடிவ் என வந்திருப்பதையடுத்து, வசந்தகுமார் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தி.நகர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, பொதுமக்கள் மற்றும் வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தி.நகர் வீட்டில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் இடைவேளியை கடைபிடிக்க வசதியாக, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளும் கடைபிக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னர் தி.நகர் வீட்டில் இருந்து, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிற்கு வசந்தகுமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது.
அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு மேல், எம்.பி. வசந்தகுமாரின் உடல், அவரது சொந்த ஊரான நாங்குநேரியில் உள்ள அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.