இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!!!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது ஜெட் வேகத்தில் பரவிவருகிறது நாளுக்கு நாள் கொரோனா நோயின் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது.

8,17,209 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 4,40,135 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,861லிருந்து 30,601ஆக உயர்துள்ளது.  

மகாராஷ்டிராவில் 3,47,502 பேரும், தமிழகத்தில் 1,92,964 பேரும், உத்தர பிரதேசத்தில் 58,104 பேரும், தெலுங்கானாவில் 50,826 பேரும், கர்நாடகாவில் 80,863 பேரும், குஜராத்தில் 52,477 பேரும், டெல்லியில் 1,27,364 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Exit mobile version