“ஊரடங்கு 4.0″தளர்வுகள் என்ன?

உலகம் முழுவதும் கொரோனா நோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கொரோனா நோயை கட்டுபடுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது.

இதனால் பல துறைகள் முடங்கியுள்ளன இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது அந்த வகையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில் களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் என்று தெரிகிறது.

4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதால். இந்த தளர்வுகளை இந்த வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது.

இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் 2 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.

4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

சினிமா தியேட்டர்களில் சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் அதிபர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரரீதியாக பலன் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கபடலாம்.

அரசியல் பொதுக்கூட்டங்கள், சமூக, கலாசார, ஆன்மிக, கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளது. மதுபான பார்களில் மது விற்க அனுமதிக்கப்படலாம்.குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version