அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்களும், மருத்துவ ஊழியர்களும், சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. அ.ம.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது வெற்றிவேலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான வெற்றிவேல், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.