கோவையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா!

கோவையில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரமாக இருந்து வந்தது. தலைநகரில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதன்படி, கோவையில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கும், 53 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுநாள் கொரோனா தொற்றுக்கு மொத்தம் 1,644 பேர் ஆளாகியுள்ளனர். அவர்களில் 1,237 பேர் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த 603 பேர் உட்பட 969 பேர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொடிசியா வணிக வளாகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையை பொறுத்தவரை செல்வபுரம், சின்னியம்பாளையம், பீளமேடு, செட்டி வீதியை உள்ளடக்கிய தெலுங்குபாளையம், உக்கடம், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகளவு உள்ளன. உயிரிழப்பை பொறுத்தவரை மாவட்டத்தில் 12ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version