தடுப்பூசி போட்டு கொண்டவருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு : கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!!!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
Illustrative vial of coronavirus vaccine

இன்று உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ்க்கு.தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, இந்தியா போன்ற முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில்,இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ஒன்றை தயாரித்தது. மருத்துவ பரிசோதனையில் இருந்த இந்த AZD1222- என்ற தடுப்பூசிதான் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடுப்பு மருந்தாக அறியப்பட்டது.உலக அளவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ரா செனகாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்காவில் இந்த 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு ஆஸ்ட்ரா செனகாவின் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னார்வலருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ”ரேண்டம் முறையில் தன்னார்வலர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை நிறுத்தியுள்ளோம். பாதுகாப்பு தரவுகள் குறித்து எங்களின் தன்னிச்சை குழு ஆய்வு செய்ய உள்ளது என கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையின் போது , விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு பிரச்சினை ஏற்படும் போது இத்தகைய நடைமுறைகள் கையாளப்படுவது வழக்கமான ஒன்று எனவே பெரிய அளவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் போது, எதேச்சையாக சில சமயங்களில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த பிரச்சினைகளை தன்னிச்சையாக கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், உடல்நலக்குறைவு ஏற்பட்ட தன்னார்வலர் எங்கு உள்ளார். எத்தகைய உடல் நலப்பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்பன போன்ற எந்த தெளிவான விவரங்களும் வெளியிடப்படவில்லை.மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்து விரைவில் சந்தைக்கு வரும் என நினைத்த இந்த மருந்து இப்போது மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி வருவதில் தாமதம் ஆகலாம் என்று தகவல்கள் கசிகின்றன.

Exit mobile version