இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை (44,658) விட சற்று அதிகம். இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 03 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.
3,59,775 பேர் வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொடர் சிகிச்சையால் கடந்த 24 மணி நேரத்தில் 31,374 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர்.
இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 52 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் ஏற்படும் மரணமும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 1 கோடியே 3 லட்சத்து 35 ஆயிரத்து 290 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 62 கோடியே 29 லட்சத்து 89 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.