கடந்த 24 மணி நேரத்தில் 37, 583 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் ஆதிக்கமும், அதன் பரவலும் குறியானது கொரோனாவால் ஏற்படும் மரணமும் குறைந்து வந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் தற்போது கொரோனா மீண்டும் படமெடுக்க ஆரமித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,593 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முன்பு இருந்ததை விட கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் தற்போது தான் சிறுக சிறுக தளர்வுகள் அளித்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணாக்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லலாம் என அனுமதிக்கப்பட்டது.
வெகு நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படும் மீண்டும் பழ வாழ்விற்கு திரும்பி விடலாம் என அனைவரும் ஆனந்தமாக இருந்து வந்த நிலையில் இந்த கொரோனா தொற்று எண்ணிக்கை மக்களை அச்சுறுத்தியுள்ளது.
ஒரே நாளில் கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைய ஒரு நாள் பாதிப்பு 37,593 அதிகரித்துள்ளது.
இதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 37,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 3,25,12,366 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவில் இருந்து 3,17,54,281 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 34,169 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,22,327 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 648 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,35,758 என்றளவில் உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 59,55,04,593 ஆக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோன தொற்றின் வேகம் அதிகரித்தாலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் வேகமும் அதிகரித்து வருகிறது. கிராமம் மற்றும் நகரத்தின் உட்புறத்தில் இருப்பவர்களுக்கு கொரோனாவின் பாதிப்பை விளக்கி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.