2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணிக்கு வந்தால் போதும் நிறுவனத்தின் முடிவால் அதிர்ந்த ஊழியர்கள்!!!

முன்னணி இயங்கு தள நிறுவனம் அதன் ஊழியர்களை அடுத்த வருடம் ஜூலை வரை அலுவகத்திற்கு வரவேண்டாம் என ஆணையிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே முடக்கி போட்டுள்ளது ஜனவரி மாதத்தில் இருந்து உலகைகே உலுக்கி கொண்டு இருக்கிறது.இன்று வரை இந்த கொரோனா என்ற அரக்கனால் இதுவரை 1கோடியே 60 லட்சத்திற்கும் அதிக மனோர் இந்த கொடிய நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்.

அதில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகம் முழுவதும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். பல நாடுகளில் இன்னும் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டு, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டு பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிகளை செய்ய அறிவுறுத்தியது.

மேலும் இந்தியாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் காலத்தை வரும் “டிசம்பர் 31″நீட்டித்துள்ளது .அந்த வகையில் தற்போது முன்னணி இயங்கு தளமான “கூகிள்”தனது 2லட்சம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய 2021 ஜூலை வரை நீட்டித்துள்ளது.

Exit mobile version