இந்தியாவில் கொரொனா பலி எண்ணிக்கை 1 லட்சம் தாண்டியது… 54.27 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரொனா பலி எண்ணிக்கை 1 லட்சம் தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரொனா பலி எண்ணிக்கை 1 லட்சம் தாண்டியுள்ளது.

உலகெங்கும் பரவியுள்ள கொரானா தாக்கத்தால் பல நாடுகளில் மக்களைப் பாதுகாக்க  அந்தந்த நாடுகளின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் 24 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.  அதன்பின் மக்கள் வீட்டுக்கு முடங்கவேண்டிய நிலை உருவானது. தற்போது 5 வது கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கை  மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,73,544 ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,00,842 ஆக் அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,27,706 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version