சைபர் கிரைம் குற்றத்தால் இந்தியாவில் ரூ.1.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரஜேஷ் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாடு. இங்கு இண்டெர்நெட் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேசமயம் இதே இணையதளத்தில்தான் பல்வேறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் சைபர் குற்றங்களால் ரூ. 1 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய சைபர் பாதுக்காப்பு ஒருங்கிணைப்பாளர் ரஜேஷ் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
இனிவரும் காலங்களில் 5ஜி நெட்வொர்க் வருவதன் மூலம் மேலும் இதுபோல் சைபர் குற்றங்கள் அதிகரிக்கும். இந்த சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருசில நிருவனங்கள் மட்டுமே செயல்படுவதால் பாதிப்புகள் அதிகரிக்கலா என எச்சரிக்கை விடுத்துள்ளார்.