ஒமைக்ரான் பரவல் காரணமாக, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும் என்று வி.கே. பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா திரிபான ஒமைக்ரான் பரவல் தொடர்பாக நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்புக் குழுவின் தலைவருமான வி.கே. பால் கூறுகையில், ”ஒமைக்ரான் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் மிகவும் மோசமான சூழலை சந்தித்து வருகின்றன. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக, ஒரு நாள் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.
அதனை, அப்படியே, இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப கணித்துப் பார்த்தால், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வது மட்டுமே கொரோனாவை வெல்ல ஒரே தடுப்பு வழியாகும்.