உத்தரபிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றின் வகுப்பறையில் ஆசிரியைகள் 5 பேர் ஆபாசமாக நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் 5 ஆசிரியர்கள் மாணவர்கள் இல்லாத காலி வகுப்பறையில் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விளக்கமளிக்க உத்தரபிரதேச கல்வித்துறை விளக்கம் அளிக்க கோரி நடனமாடிய 4 ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் உத்தரவிடப்பட்டது.
இதில் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் பள்ளியின் நெறிகளை மீறிய செயல் என ஆசிரியர்கள் ஐவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.