சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டிய கூட்டம்…

சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் துப்பு துலங்கியது மாமனார், மாமியார், கணவரை கொன்ற மருமகள். சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டியுள்ளனர்.

சென்னை பாரிமுனை அடுத்த சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி எனும் தெருவில் வசித்து வருபவர் தலில்சந்த் இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், தற்போது இவர் சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல், மகள் பிங்க். இதில் மகள் பிங்க் திருமணமாகி வேறொரு இடத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோரின் வீட்டுக்கு மகள் பிங்க் போன் செய்திருக்கிறார். அனால் தலில்சந்த் குடும்பத்தில் யாரும் போன் எடுக்கவில்லை. இதனையடுத்து, இரவு தனது பெற்றோரின் வீட்டுக்கு பிங்க் வந்துள்ளார். அங்கு வீட்டின் முன்புற கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது, மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, சோபாவில் தலில்சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் ஆகிய 3 பேரும் நெற்றியில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போட்டார்.

சம்பவம் குறித்து யானைகவுனி போலீசில் பிங்க் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், இறந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் சொத்து தகராறு காரணமாக இக்கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தலில்சந்த்தின் மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி, பின்னர் மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர்.

இக்கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் அவரின் மருமகளே அவரை கொன்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version