தாவுத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன!!!

நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு மஹாராஷ்டிரவில் உள்ள 6 சொத்துக்கள், 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாக செயல் பட்ட நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மீது,பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தற்போது, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பதுங்கி உள்ளார்.பாகிஸ்தானும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது, மத்திய அரசும் அவரை ஒப்படைக்கும்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள, தாவூத்தின் வீடுகள் உட்பட ஆறு சொத்துக்களை ஏலம் விடுவதற்கு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், நேற்று ஏலம் விடப்பட்டது. முன்னதாக, இந்த சொத்துக்களை நேரில் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.மொத்தம், 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த சொத்துக்களை, தாவூத்தின் உறவினரான, இஸ்மாயில் கஸ்கார் பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version