செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு

நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காலை 8 மணி முதல் விநாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில் அதனை 3,000ஆக அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏரிக்கு நீர்வரத்து 5,900 கனஅடியாக இருந்த நிலையில், அது 6,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version