உ.பி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தள்ளிவைப்பு? இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!!


உ.பி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தள்ளிவைப்பா? சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடந்தவுள்ள இந்திய தேர்தல் ஆணையம்.

டெல்லி,
அடுத்த ஆண்டு பிப்ரவரி-ஏப்ரல் மாதத்தில் உத்தரபிரதேசம்,பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது; காரணம் சமீப நாட்களாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் 13 பேர் கொண்ட குழு பஞ்சாப்,கோவா,உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை ஆய்வு செய்தும்; மாநில தேர்தல் அதிகாரி,மாவட்ட தேர்தல் அதிகாரி & காவல் கண்காணிப்பாளர்கள், அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் எல்லாம் நடத்தி வருகிறார்கள். 28-30ம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர் விரைவில் தேர்தல் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்றைய முன்தினம் தேர்தல் ஆணையத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் கேட்டுக்கொண்டிருந்தது. இது தொடர்பாக நேற்றே விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உ.பி மாநிலத்தில் ஆய்வு செய்த பின்னர் இவை குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில தேர்தலை நடத்துவதில் உள்ள சுகாதார கட்டமைப்பு சூழல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசனை நாளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பரப்புரைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதால் வைரஸ் பரவல் அதிகரித்து அது மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கைப்படும் நிலையில் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலுக்கு பிறகு தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் கணிசமாக கொரோனா பாதிப்பு அதிகரித்தது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version