டெல்லி: விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு


விவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் 11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது; பாதுகாப்பையும் உறுதி செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல்.


டெல்லி, “3 புதிய வேளாண் சட்டம்”-களை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மழைக்காலக கூட்டத்தொடரின் போது கொண்டுவந்தது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களே லாபம் பார்க்கும் எனவும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள் என கூறி பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய வாகனங்கள் மூலம் டெல்லியை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள்; ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் என்பதால் போலீசார் டெல்லி உத்திரபிரதேச எல்லையான காசிப்பூர், டெல்லி ஹரியானா எல்லையான டிக்ரி, டெல்லி பஞ்சாப் எல்லையான சிங்கு ஆகிய இடங்களில் சாலைகளில் தடுப்பு அமைத்து மறித்தனர்.

அந்த இடங்களையே தங்கள் போராட்ட காலமாக மாற்றி கொள்ள தேசிய நெடுண்சாலைகளும், சாலைகளும் போராட்ட களமாகவே மாறியது! இந்நிலையில் விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை மேற்கோள்கட்டி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றங்களில் தொடுத்த போது, போராட மைதானம் கேட்டோம் ஆனால் போலீசாரே அரண் அமைத்து எங்களை தடுத்தார்கள் என விவசாயிகள் கூறினார்கள். இவை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் கடந்த ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் வன்முறையாக மாறியது, இதனால் மீண்டும் அப்படி ஒரு வன்முறை நடந்து விட கூடாது என்பதற்காக கான்கிரீட் கலவை கொண்டு சாலைகளை பல மீட்டர் தூரம் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு டெல்லி-ஹரியானா எல்லையான டிக்ரியில் ஒரு வழி சாலையாக பயன்படுத்தும் வகையில் சாலையில் உள்ள கான்கிரீட் உடைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறும் போது 11 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள சாலை, இதனால் பல்வேறு இடர்பாடுகளை சாதாரண மக்களும் சந்திக்கிறார்கள். ஆகவே சாலையின் ஒரு வழியை மட்டும் திறந்துள்ளோம், ஆனால் சாலை முழுமையாக திறக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என கூறி விட்டனர். இதேபோல, டெல்லி-உத்திரபிரதேச எல்லையான காசிப்பூரிலும் சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர், அங்கும் பணியில் உள்ள போலீசார் கூறுகையில் சாலையை திறக்க கூறி உத்தரவு வந்துள்ளது என்பதால் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கவும் மேல் அதிகாரிகள் கூறியுள்ளதாக பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Exit mobile version