திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருடாவருடம் முருகனின் சஷ்டி திருவிழாவின் கடைசி நாள் ஆறுபடை வீடான திருச்செந்தூரில் வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் சாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. மாலையில் சாமிக்கும், அம்பாளுக்கும் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியின் சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

வழக்கமாக கோவில் கடற்கடையில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் இந்த கொரோன தடுப்பு காரணமாக கோவில் கிரிப்பிரகார கடற்கரை நுழைவுவாயில் அருகில் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. ஏழாம் திருநாளாக நாளை சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

சுவாமியை நேரடியாக காண அனுமதிக்காததால் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்புகள் ஊன்றப்பட்டுள்ளது.

Exit mobile version