8 பேர் அடங்கிய தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு… பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…

சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக தி.மு.க. சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., வருகிற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் அறிக்கை குழு
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்.
டி.ஆர். பாலு, (பொருளாளர்), சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச்செயலாளர்), கனிமொழி, எம்.பி.,(தி.மு.க. மக்களவைக் குழு துணைத் தலைவர்), திருச்சி சிவா, எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்), டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. (செய்தித் தொடர்புச் செயலாளர்), பேராசிரியர் அ.ராமசாமி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version