சேலத்தில் சாமியார் தற்கொலை எஸ்.ஐ அடித்ததால் விபரீதம்!என் ஆத்மா உன்னை சும்மா விடாது என சாபம்

சேலம் மாவட்டம் குண்டாங்கல் காடு பகுதியில் சரவணன் என்ற சிவனடியார் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தாயத்து கட்டுவது, பரிகார ஆலோசனை, பூஜைகள் செய்வது, பேய் ஓட்டுவது மற்றும் பல சாங்கியங்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் போலீசால் தாக்கப்பட்ட சாமியார் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) அன்று சிவனடியாரிடம் பூஜை நடத்தி, எந்திரம் கட்டிக்கொள்ள அப்பகுதி பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த தேவூர் காவல் நிலைய எஸ்ஐ மைக்கேல் அந்தோணி வேலைக்கு செல்லாமல் பூஜை என்ற பேரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டு கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியை கொண்டு அடித்துள்ளார்.மேலும், தாயத்து கட்டிக்க வந்த பெண்ணையும் அடுத்து விரட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை சிவனடியாரின் மகன்பார்த்துள்ளான். இந்நிலையில், பெற்ற பிள்ளைகள் முன்பு போலீசிடம் அடி வாங்கியதாக மன விரக்தி அடைந்த சரவணன் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். அதுகுறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சரவணனின் வீட்டில் இருந்து பின்புறம் துர்நாற்றம் வீச தொடங்கியது. அங்கு சென்ற பார்த்தபோது, சரவணன் உடல் சடலமாக அழுகிய நிலையில் இருந்ததை கண்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சரவணனை தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, தற்கொலைக்கு முன்பு சரவணன் வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், என்னுடைய ஆத்மா எஸ்ஐ மைக்கேல் அந்தோணியின் குடும்பத்தை விடாது. நீயும், உன் குடும்பம் தப்பவே முடியாது என்று சாபம் விட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Exit mobile version