தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறது.இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுக்க திமுக கட்சி திட்டமிட்டு இருந்தது.அப்பொழுது கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக அந்த பொது குழுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் திமுக பொதுகுழுக்கூட்டம் நடக்க இருப்பதாக மு .க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் .அதில் தற்போது திமுக பொருளாளராக பதவி வகிக்கும் துரைமுருகன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்க படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகும் நிலையில் அந்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி வருகிறது.
எனவே பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா,கனிமொழி,டி.ஆர்.பாலு மற்றும் ஏ.வ.வேலு ஆகியோரில் யாராவது ஒரு நபர் தேர்வு செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.