திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஆயினும் தற்போது பொது முடக்கங்கள் சற்று தளர்ந்து பலரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் இப்போது கொரோன தன வேலையை காட்டுகிறது. மேலும் இந்த கொரோனவாழ் அரசியல் தலைவர்களை விடாமல் துரத்தி வருகின்றது. தினம் ஒரு அரசியல் கட்சி தலைவரோ மந்திரியோ அல்லது எம்.ல்.ஏ வோ பாதிக்கப்படுவது நமக்கு பழகிப்போனது.

தற்போது திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது. அங்கு தினேஷ் அவர்களை சந்திக்க நிறைய திமுக கட்சியினர் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version