தொடங்கியது தி. மு. க பொதுக் குழு கூட்டம்…

தி. மு. க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. முதல் முறையாக காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது.சரியாக இன்று காலை 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.

திமுகவின் ஒவ்வொரு பொதுக்குழுவும் மிகவும் பிரமாண்ட முறையில் நடப்பது வழக்கம். ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக இந்த பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அணிகளின் மாநில அமைப்பாளர்கள் ஏன ஏறக்குறைய 3500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக வின் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவிற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகனும்,8 வது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

Exit mobile version