தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தமிழகம் மீட்போம் காணொலி பொதுக்கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தமிழகம் மீட்போம் காணொலி பொதுக்கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. பொதுக்கூட்டம்
காணொலி காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்!’ எனும் தலைப்பிலான 2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் தி.மு.க. தலைவர் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக சிறப்புப் பொதுக் கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தி.மு.க. மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.
நவம்பர் 18 – தருமபுரி, நவம்பர் 21 – சேலம், நவம்பர் 25 – திருநெல்வேலி/தென்காசி, நவம்பர் 29 – திருப்பூர், டிசம்பர் 2 – கிருஷ்ணகிரி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.