முதலமைச்சர் சுற்று பயணத்தில் பிரதமரால் மாற்றம்…

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனவை குறைக்கவும் தடுக்கவும் பல நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகிறது. பல தூய்மை செய்யும் பணியாளரால் நாம் உபயோகப்படுத்தும் இடங்கள் தொடர்ந்து சுத்தம் செய்ய பட்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டம் வாரியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அவர் இதுவரை பல மாதங்களில் பரிசோதனை செய்து முடித்துவிட்டார்.

இதுவரை, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு நடத்தியுள்ளார். மேலும் அவர் நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும், 23-ந்தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கும் செல்ல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

அனால் இந்த திட்டத்தில் திடீர் தருபங்கள் ஏற்பட்டுள்ளது. பிரதர் மோடி வரும் 23 தேதி அணைத்து முதலமைச்சர்களிடமும் காணொளி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி அவர்களும் கலந்து கொள்வதால் அவர்களை இந்த சுற்று பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சென்று மாவட்ட ஆட்சியாளருடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த இருக்கின்றார். மேலும் பல நலஉதவி திட்டங்களும் தொடங்க இருக்கின்றார்.

Exit mobile version