இரண்டு குழந்தை இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது வருகிறது புதிய சட்டம்!!!

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலம் திகழ்கிறது . இந்நிலையில் அங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்த அம்மாநில பாஜக அரசு பெரும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, அங்கு இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு சில முக்கிய மாற்றங்கள் செய்ய அம்மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு தடைவிதிக்க அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version