நீருக்காக விலங்குகளுக்கு இவ்வளவு போராட்டமா…

யானைகள் பொதுவாகவே கா.ட்.டுப்பகுதியில் தான் வசித்து வருகின்றன. இதுபோக கோயில் பயன்பாட்டுக்காக பல கோயில்களிலும் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுபோக சில இல்லங்களிலும்கூட கோயில் திருவிழாக்களில் வாடகைக்கு விடுவதற்காக யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இங்கு யானைகளை வைத்து ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிளாஸ்டிக் போன்றவற்றின் கட்டுப்பாடற்ற பெருக்கத்தினால் இன்று வனமும் பெரிதாக சேதம் அடைந்து வருகிறது. கானகங்களிலேயே இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீராதாரங்கள் வறண்டு போக, அங்கு இருந்து தண்ணீர் தேடி நகர்ந்து வந்தது ஒரு தாய் யானையும், குட்டி யானையும்!

இவ்விரு யானைகளும் தண்ணீர் தாகத்தோடு தேடி அலைந்தும் குளம், குட்டை என எதுவும் இல்லை. ஒருகட்டத்தில் இந்த யானைகள் அப்பகுதியில் இருந்த அடி பைப் ஒன்றின் அருகே சென்று ஏக்கத்துடன் நின்றன. இதைப் பார்த்த அப்பகுதி வாசி ஒருவர் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க, அந்த நீரை தன் துதிக்கையால் பிடித்து தாய் யானையும், குட்டி யானையும் பருகியது.

சூழல் விருத்தியாய் காணப்படும் கானகத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு என்பது மானுட உலகுக்கு விடுக்கப்படும் சவால். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? அந்த யானைகள் தண்ணீர் பருகும் வீடீயோவை பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு பிரமாண்ட பாம்புகள் சேர்ந்து நிற்கும் வீடியோவும் அதனோடு சேர்ந்து வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Exit mobile version