பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்… மக்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கும் மகன்


தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கொரோனா காரணமாக கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராகவும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திரங்களிலும் நடித்திருந்தார். 

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தனது தந்தை சினிமாவில் நடித்து நிறைய சம்பாதித்ததாகவும் ஆனாலும் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள மருத்துவ செலவுகளை தங்களால் சமாளிக்க முடியவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் தான் உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார். சிவசங்கர் மாஸ்டருக்கு மட்டும் நாள் ஒன்றிற்கு லட்சங்களில் மருத்துவ செலவு ஆவதாகவும் தங்கள் குடும்பத்தினருக்கு உதவ வேண்டியும் இளைய மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் தான் உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார். சிவசங்கர் மாஸ்டருக்கு மட்டும் நாள் ஒன்றிற்கு லட்சங்களில் மருத்துவ செலவு ஆவதாகவும் தங்கள் குடும்பத்தினருக்கு உதவ வேண்டியும் இளைய மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version