‘அண்ணாத்த’வை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்த #PlipPlip யூடியூப் சேனல்… ரசிகர்கள் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கால் நூற்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா – ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் இத்திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியது. வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் திரைப்படங்களில் புதிய சாதனை படைத்தது.

இருப்பினும், குடும்பப்படமாக அமைந்துள்ள அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

இவ்வளவிற்கு மத்தியிலும் அண்ணாத்த படம் 200 கோடி வசூலை கடந்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், #PlipPlip எனும் யூடியூப் சேனலில் அண்ணாத்த படத்தின் விமர்சனத்தை, மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருப்பது ரஜினிகாந்தின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, படம் குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சிக்க உரிமை இருப்பதாகவும், ஆனால், தங்களின் விளம்பரத்திற்காக ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி, விமர்சிப்பதை ஏற்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்று தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி வரும் PlipPlip என்னும் யூடியூப் சேனலை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த சேனலைக் கண்டித்து #Plipplip என்னும் ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version