மது போதையில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை…. வேலூர் அருகே பரபரப்பு..!!

போதையில் மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை கண்ட வினோத் தனது தந்தையை கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதை அறிந்த வினோத் தந்தை தற்கொலை செய்து கொள்வாரோ என்று அஞ்சி கூச்சலிட்டார்.

அறைக்கு சென்று கதவை தட்டி அவரை வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் அறைக்குச் சென்று அவர் தனது துப்பாக்கியை எடுத்து வெளியே வந்து வினோத்தை சுட்டு விட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Exit mobile version