ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதார மானியத்தை விடுவித்தது மத்திய நிதி அமைச்சகம்!!

தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரம் மானியத்தை விடுவித்து மத்திய நிதி அமைச்சகம்.

டெல்லி, இதுதொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 15வது நிதிக்குழு 2021- 2026 காலகட்டம் வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,27,911 கோடி ரூபாய் மானியமாக வழங்க பரிந்துரை வழங்கியது. பரிந்துரையில் வழங்கப்பட்ட மொத்த தொகையில் சுகாதாரத்திற்கான மானியமாக 70,051 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 43,928 கோடி ரூபாய் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 26,123 கோடி ரூபாய் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்படும். இந்த தொகை என்பது ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும்; சுகாதாரம் தொடர்பான பாதுகாப்பு கட்டமைப்புகளை அதிகரிக்கவும் பயன்படும் என மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொகையின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் கண்டறிவதற்கான உள்கட்டமைப்பை அதிகரித்தல் கூடுதல் மருத்துவ கட்டிடம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான தொகையையும் இதிலிருந்தே ஊரக உள்ளாட்சிகள் / நகர்புற உள்ளாட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மத்திய நிதி அமைச்சகத்தின் செலவின துறை இன்று 19 மாநிலங்களுக்கான சுகாதார மானியத்தை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கான சுகாதார மானியமாக 805.928 கோடி ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version