அம்மா ஓட்டு போட்ருங்க…. காலில் விழுந்து…. வாக்கு சேகரிக்கும் அமைச்சர் – வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தலை மனதில் வைத்து மக்களை கவரும் வகையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அந்தவகையில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூலித்தொழிலாளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Exit mobile version