இயற்கை காய்கறிகளால் கரம் தூக்கிய பெண் விவசாயி : ஒரு ஏக்கரில் டாப்பு டக்கர்…!!!

ஒரு ஏக்கர் தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்காமல், ரசாயனம் பயன்படுத்தாமல், இயற்கை விவசாயம் செய்து காய்கறிகளை இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டும் பெண் விவசாயி.

காங்கேயம் அருகே சென்னிமலை சாலையில் ஆலம்பாடி உள்ளது. இங்கு செந்தில் மற்றும் கோமதி என்ற தம்பதியினர் தனது தோட்டத்தில் தங்களது மகனுடன் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக கொரானோ பெருந்தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்தும், பல்வேறு தரப்பு பொதுமக்கள் நோய்வாய்பட்டும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிராமபுரத்தை சார்ந்த கோமதி என்ற பெண். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட கோமதி, இயற்கை அங்காடிகளில் ரசாயணம் அடிக்காத காய்கறிகளின் தட்டுப்பாட்டை அறிந்து, தங்களது குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை முதலில் உற்பத்தி செய்துள்ளார். இக்காய்கறிகளின் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சத்துக்களும், அதிகப்படியான ருசியும் இருந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இயற்க்கை அங்காடி களுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்து, 1 ஏக்கர் பரப்பளவில் புடலங்காய், பீக்கங்காய், பாகற்காய், வெண்டைக்காய், சுரைக்காய் ஆகியவைகளை உற்பத்தி செய்து, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு கொரானோ நோய் தொற்று அதிகமானதால், இயற்கையாக விளைவிற்கும் காய்கறிகளின் தேவையும் அதிகரிக்க துவங்கியது. மேலும், நகர் புறங்களின் ஆர்கானிக் கடைகள் அதிகரிக்க துவங்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது கோமதி உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு போட்டி போடத் துவங்கினர். தற்போது இவரின் தோட்டத்திற்கே வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது 1 ஏக்கர் பரப்பளவில் தான் விளைவிப்பதாகவும் இனிமேல் கூடுதல் நிலத்திலும் காய்கறிகளை விளைவிக்கப் போவதாகவும் தெரிவிக்கின்றார்.

Exit mobile version