இந்தியா- இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்… தேசிய மீனவர் பேரவை தலைவர் கோரிக்கை

இந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை; 2017ம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை எதுவும் மத்திய அரசு நடத்தவில்லை என குற்றச்சாட்டு.

டெல்லி, தமிழக – இலங்கை இடையேயான பேச்சுவார்த்தை என்பது 2017ம் ஆண்டு வரை 4 கட்டமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக மீனவர்கள் தாக்குதல் என்பது பெரிய அளவில் இல்லை!

ஆனால் கடந்த மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கடற்கரையில் சென்ற மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட அதில் இருந்து 23 தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் அடைந்துள்ளனர். மேலும், இரு தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்ற மீனவ படகை இலங்கை கடற்படை முட்டி மோதியதில் படகும் சேதம் அடைத்தது, அதில் இருந்து இரண்டு மீனவர்கள் கடலில் விழுந்தனர்.

இதில் ஒரு மீனவரின் உடல் இப்போது வரை உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாரும் போதை பொருள் கடத்தி கொண்டோ அல்லது தங்கம் கடத்தி கொண்டு சென்றவர்களோ இல்லை! அவர்கள் தங்கள் வாழ்வாதத்திற்காக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்; ஆனால் அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் , மீனவர்களை கைது செய்வதும் சரியான முறையில் செல்வதாக தெரியவில்லை என்றார்.

இந்நிலையில் 2017ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறாமல் உள்ள இரு நாட்டு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க கோரி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புரூசோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளோம்.

துறைச்சார்ந்த அமைச்சர்களும் இப்பிரச்சனையை கவனித்து வருவதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கோரிக்கையின் நகலை பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அழுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பாக உடனடியாக இந்திய அரசு தலையிட்டு உயிரிழந்த மீனவ குடும்பத்தினருக்கு இழப்பீடும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, நாகப்பட்டினம், ராமதபுரம், திருவாரூர், காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்ட மீனவ பிரதிநிதிகளை மத்திய மீன்வளத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்து இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உள்ள கோரிக்கைகளை பெறவேண்டும் எனவும் அந்த கோரிக்கைகளுக்கு ஏற்ப இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளை அழைத்து பேசவைக்க ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

பேட்டி : எம்.இளங்கோ, தலைவர். தேசிய மீனவ பேரவை.

Exit mobile version