சென்னை அருகே உள்ள நங்க நல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று தீர்த்தவாரி முவசரன்பேட்டை குளத்தில் நடைபெற்றது. அப்போது அந்த குளத்தில் சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க அர்ச்சகர்கள் 25 பேர் குளத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் 2 முறை சுவாமி சிலையையும் அர்ச்சனை பொருட்களையும் மூழ்க வைத்து அவர்களும் மூழ்கினர். அதில் 3 ஆவது முறை அவர்கள் மூழ்கும் போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி அவர் தத்தளித்தார். இதை கண்ட மற்ற 4 அர்ச்சகர்கள் பதறியடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் அந்த அர்ச்சகர்களும் நீரில் தத்தளித்தபடியே மூழ்கிய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் படகு மூலம் நீரில் மூழ்கிய 5 அர்ச்சகர்களின் உடல்களையும் மீட்டெடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த அர்ச்சகர்களில் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.