தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரானது பெங்களூர் நகரில் இன்றைய தினம் தொடங்கியது . இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ‘ஏ’ பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகளும் உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணியின் ஆதிக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தி இருக்கின்றார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து 16 வது நிமிடம் மற்றும் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார் . தொடர்ந்து பதில் கோல் அடிக்க பாகிஸ்தான் அணி போராடி முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
அபார வெற்றியை பெற்றது இந்திய அணி!
-
By mukesh
Related Content
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024
மாமதுரை விழா!
By
daniel
August 8, 2024
நீதிமன்றம் உத்தரவு
By
daniel
February 19, 2024