நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து இன்று 12 மணி முதல் தொடங்க உத்தரவு.

நிவர் புயல் காரணமாக நேற்று முன்னாள் பேருந்துகள் நிறுத்தப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி பேருந்துகள் அனைத்தும் மதியம் ஒரு மணி அளவில் பணியிடம் வந்தது. அதன்பின்னர் இன்றுவரை உத்தரவிடப்பட்டு ஏழு மாதவங்களில் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் புயல் கரையை கடந்தது. அதன் காரணமாக மீண்டும் பேருந்துகள் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்துமே இன்று பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என தமிழக அரசு சற்று முன்னதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக பேருந்துகள் அனைத்தும் பணியிடத்தில் இருந்து புறப்படுவதற்கான வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் பேருந்துகள் இயங்காமல் இருந்ததால் பெரிதளவில் பயணிகள் யாரும் புயலால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 12 மணி முதல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என எதிர்ப்பாக படுகிறது.