தமிழகத்தில் நாளை முதல்பொது போக்குவரத்துக்கு தொடங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னையில் நாளை முதல் அனைத்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் பேருந்தில் செல்வதற்கு ஏற்ற வகையில்பயணத்தற்கான பஸ் பாஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து விதமான பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையே மட்டும் ஒரு சில பேருந்துகள் அனுமதிக்கப்பட்டிருந்தது.ஆனால் நோய்த்தொற்று பரவல் அதிகமானோரின் காரணமாக மீண்டும் அதற்கும் தடை விதித்து அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது வரும் நாளை செப்டம்பர் 1 முதல் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழகஅரசு அனுமதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தற்போது அரசு போக்குவரத்துக்கழகங்களில் பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, பேட்டரிகள் சரி பார்க்கும் பணி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.
மேலும், கட்டாயமாக சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து பேருந்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் எனவும், 50 சதவிகித பயணிகள் மட்டுமே பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்காக, சென்னையில், பயணிகள் மாநகராட்சி பேருந்து பயணத்துக்கான மாதாந்திர பஸ் பாஸ், தினசரி பஸ் பாஸ், பெற்றுக்கொண்டு விருப்பம்போல் அனைத்து பெண்களும் பயணம் செய்யும் 1000 ரூபாய் பஸ் பாஸ் போன்றவையும் கொடுக்கப்படும் இவ்வாறுபோக்குவரத்து கழகம்தெரிவித்துள்ளது.