இன்று முதல் 7 நாள் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொலை அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது.

ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அம்மாநில அரசு 7 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதில் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version