விளையாட்டு உலகில் மறக்க முடியாதவை: சௌரவ் கங்குலியின் வெற்றிக் குதூகலம்!

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றதை நாடே கொண்டாடிய போதும், முகத்தில் பளீரென்று தெரிந்த ஆனந்தத்துடன் தன் ஜெர்சியைச் சுழற்றி கங்குலி கொண்டாடிய தருணத்தை யாராலும் மறக்க முடியாது!

இங்கிலாந்து அணியை எதிர்த்து லார்ட்ஸ் மைதானத்தில், 0 க்கு 106 ரன்களில் இருந்து இந்தியா 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் வேண்டும் என்ற நிலைக்குச் சென்றது, வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்றே தோன்றியது.

அப்போது யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகிய இரு இளம் வீரர்களும் இணைந்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத வெற்றிகளில் ஒன்றை உருவாக்கினர்..

யுவராஜ் 42 வது ஓவரில் 69 ரன்களுக்கு வெளியேறினார். இந்தியாவுக்கு இன்னும் 59 தேவைப்பட்டது, ஆனால் கைஃப் நன்றாக பேட் செய்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்.

இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். கேமராக்கள் லார்ட்ஸ் டிரஸ்ஸிங் அறைக்கு வந்தன, அங்கு வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வி.வி.எஸ் லக்ஷ்மனின் பின்னால் இருந்து சவுரவ் கங்குலி வெளிப்பட்டு, தனது சட்டையை கழற்றி வெற்றியைக் கொண்டாடினார், மகிழ்ச்சியில் கர்ஜித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் உலக வீரர்களாக மாறும் ஒரு இந்திய அணிக்காக ஒரு அடித்தளம் அமைத்தார் என்றே கூற வேண்டும் .

“அது மிகவும் சிறப்பான தருணம் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். என் மகள் அதைப் பார்த்து, ஏன் அவ்வாறு செய்தேன் என்று கேட்கிறாள், ஏனென்றால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று கூறினேன். நான் மிகவும் பழமைவாதமிக்க பெங்காலி குடும்பத்திலிருந்து வந்தவன். அந்த தருணத்தின் உச்சத்தில் நடந்த ஒரு செயல் அது, “என்று கங்குலி 2018 இல் ஒரு நேர்காணலில் பார்கா தத்திடம் கூறினார்.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஜெஃப்ரி பாய்காட் கங்குலியை ஒரு ‘குறும்புக்கார பையன்’ என்று கூறி, அவரது செயலுக்கு விளக்கம் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது!

Exit mobile version