சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 23ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணொலி மூலம் ஆஜர்
வீரமணியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
போக்சோ வழக்கில் விசாரணை
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீரமணி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
