கேரள திரையரங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட ’கில்லி’… நடுவில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோவால் அலறிய விஜய் ரசிகர்கள்!!

நடிகர் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய்-த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். வசூல் சாதனை செய்த ‘கில்லி’ விஜய் ரசிகர்களாக அல்லாதவர்களுக்கூடப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று என்றே சொல்லலாம். மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ‘ஒக்கடு’ ரீமேக்கான கில்லியை விறுவிறு இயக்கத்தால் சூப்பர் ஹிட் ஆக்கினார் இயக்குநர் தரணி. இப்போதும், பலருக்கு ஃபேவரிட் படமாக கில்லியை சொல்கிறார்கள். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பியை அதிகரிக்க செய்யும் படம் அது.

இந்த நிலையில் ‘கில்லி’ கேரளாவில் நேற்று முதல் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து மூடப்பட்டிருந்த கேரள தியேட்டர்கள் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதிமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தை போலவே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் ‘கில்லி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து நீண்ட வரிசையில் சாலைகளில் விஜய் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு பைக்குகளிலும் கார்களிலும் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைக் கண்டு ரசித்துள்ளனர். அப்போது படத்தின் இடைவேளையின் போது பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வீடியோவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

Exit mobile version